உலகம்

டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட இளம்பெண்- முன்னாள் கணவரின் விபரீத முடிவால் பறிபோன 2 உயிர்கள்

டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட இளம்பெண்- முன்னாள் கணவரின் விபரீத முடிவால் பறிபோன 2 உயிர்கள்

JustinDurai

விவாகரத்து பெற்ற பிறகுதான் மகிழ்ச்சியாக இருப்பதாக டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணை அவரது முன்னாள் கணவர் கொலை செய்ததோடு தானும் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா வாழ் பாகிஸ்தானியரான சானியா கான் என்ற பெண்ணும் பாகிஸ்தானை சேர்ந்த ரஹீல் அகமது என்பரும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின் இருவரும்  அமெரிக்காவின் சிகாகோ நகரில் குடிபெயர்ந்தனர். ஆனால் திருமணமான சில மாதங்களிலே மன வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். தற்போது ரஹீல் அகமது  ஜார்ஜியாவிலும், சானியா கான் சிகாகோ நகரிலும் வசித்து வருகின்றனர். இருவரும் விவாகரத்து பெற்றப்பின் தனித்தனியாக குடித்தனம் நடத்தி வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், டிக்டாக்கில் ஆக்டிவாக இருக்கும் சானியா, கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது திருமண வாழ்க்கையின் கசப்பான நினைவுகளை பகிர்ந்திருந்த சானியா, விவாகரத்துக்கு பின்னர் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அந்த டிக்டாக் வீடியோவில் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த சானியாவின் முன்னாள் கணவர் ரஹீல், ஜார்ஜியாவில் இருந்து சுமார் 1,100 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து கார் மூலம் பயணம் செய்து சிகாகோவிற்கு வந்தார். பின்னர் அவரது முன்னாள் மனைவியான சானியாவை தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் ரஹீல் அகமது தன்னையும் துப்பாக்கியால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிகாகோ போலீசார் சடலங்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: குற்றவழக்கு விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை – நீதிமன்றம் வேதனை