உலகம்

தொழில்நுட்பங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்க முடியும்: இவாங்கா ட்ரம்ப்

தொழில்நுட்பங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்க முடியும்: இவாங்கா ட்ரம்ப்

webteam

தொழில்நுட்பங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்க முடியும் என அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகளும் அவரது ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் தெரிவித்தார்.

ஹைதரபாத்தில் நடைபெறும் உலகத் தொழில்முனைவோர் மாநாட்டின் இரண்டாவது நாள் விவாதத்தில் பங்கேற்ற இவாங்கா ட்ரம்ப், தொழிலில் பெண்களின் பங்களிப்பு குறித்துப் பேசினார். தொழில்நுட்பங்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்க முடியும் என்றும் அவர் பேசினார். இந்த அமர்வில் பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர். கோல்கொண்டா கோட்டை உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இவாங்கா செல்கிறார். இன்று மாலை அமெரிக்கா திரும்புகிறார்.

ஹைதராபாத் ஹைடெக் சிட்டியில் உள்ள எச்ஐசிசி வளாகத்தில் 3 நாள் சர்வதேச தொழில் முனைவு உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் கலந்து கொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.