டெல்லியில் செப்டம்பர் 9,10 தேதிகளில் நடைபெற இருக்கும் G20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஃப்ரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் மற்றும், சர்வதேச அமைப்பின் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இருக்கின்றனர். அதேசமயம், ரஷ்ய அதிபர் புதின், மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இதில் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக அவர்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
G20 மாநாடு சம்பந்தமாக பெர்னார்ட் டி சாமி கூறும்போது,
G20 மாநாடு... அப்படி என்ன முக்கியத்துவம் பெற்றது?
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் உலக பொருளாதாரத்தை சரி செய்வதுதான். ஆசியாவில் 1998-ல் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை சரி செய்யும் நோக்குடன் உலக நாட்டின் நிதி மந்திரியும், வங்கிகளும் இணைந்து அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினால் பொருளாதாரத்தை சீர்படுத்த முடியும் என நினைத்தார்கள். அதன்படி 20 நாடுகள் கலந்து்கொண்டு 1999லிருந்து 2008 வரை கூட்டத்தை நடத்தி முடிவுகளை மேற்கொண்டு வந்தனர்.
இருப்பினும், 2008ல் மீண்டும், உலக பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. அதனால், இந்தக் கூட்டத்தில் அந்ததந்த நாட்டு தலைவர்களும் கலந்துக்கொள்ள முடிவெடுத்தார்கள். அதன்படி G20 மாநாடு 2009 ஆண்டு முதல் கூட்டப்பட்டது. 2023ம் ஆண்டு G20 மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதை கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி இந்தோனேசியாவில் வைத்து, முடிவெடுக்கப்பட்டது. G20 மாநாட்டின் முக்கிய நோக்கம் பொருளாதாரத்தை மையப்படுத்தி பொருளாதார பின்னடைவை சரி செய்வது தான்.
இதில் யார் யார் கலந்துகொள்வார்கள்.?
இக்கூட்டத்தில் நிதி அமைச்சர்களும், கவர்னர்களும் கலந்துகொள்வார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த வருடத்திற்கு செர்பா தலைவராக ஒருவரை நியமனம் செய்வார்கள். அதன்படி நடப்பாண்டு அமிஜாப்கான்ஸ் என்பவர்தான் செர்பாவின் தலைவர். இவர், இக்கூட்டத்தில் எதைப்பற்றி விவாதிப்பது? என்னென்ன பிரச்னை, எதைப் பற்றி பேசவேண்டும் என்பது குறித்து ஒரு டேட்டாவை தயார் செய்து தலைவர்களிடம் அளிப்பார். இத்தகவல்களை கொண்டு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
உக்ரைனுடனான போர் காரணமாக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இதில் பங்குகொள்ளவில்லை. இருவருடைய வருகையும் இல்லாதபோது இந்த அமைப்பில் பிளவு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா?
இருக்கும் சூழ்நிலை உள்ளது. இருந்தாலும், இந்த மாநாட்டை மேலும் விரிவுப்படுத்தும் எண்ணமும் G20 மாநாட்டிற்கு உள்ளது. அதற்கான கட்டாயமும் இருக்கிறது. ஏனெனில் ஆப்ரிக்கா நாடுகளிலிருந்து ஒரே ஒரு நாடான தென் ஆப்ரிக்கா மட்டும் தான் G20 மாநாட்டில் கலந்துகொண்டு இருக்கிறது. இதை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று உலக நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதில் முக்கிய நிகழ்வாக ஆப்ரிக்க நாடுகளின் யூனியனை இணைக்க அமெரிக்கா விருப்பம் கொண்டுள்ளது.
உள்நாட்டு அரசியல், சர்வதேச அரசியலில் ஏற்படும் தாக்கம் என்ன?
ஆளுங்கட்சி இதை தேர்தல் யுக்தியாக பயன்படுத்திக்கொள்ளும். இருப்பினும் இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பல நல திட்டங்கள் ஏற்படுவதற்கு வழிவகை செய்கிறது. இம்மாநாட்டின் மூலம், ஒருவருக்குள் ஒருவர் புரிந்துக்கொள்வதிலும், அதன் மூலம் தொழில்துறையில் முன்னேற்றமும், NGO போன்றவைகளை ஏற்படுத்தவும் வழி வகை செய்யும்.