உலகம்

"இந்தியாவுக்கு ஆதரவாகப் படைகளை அனுப்புவோம்" - அமெரிக்க அரசு !

"இந்தியாவுக்கு ஆதரவாகப் படைகளை அனுப்புவோம்" - அமெரிக்க அரசு !

jagadeesh

இந்தியாவிற்கு ஆதரவாகவும், சீனாவிற்கு எதிராகவும் அமெரிக்கா தனது படைகளை அனுப்பும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

லடாக் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15 ஆம் தேதி இரவு சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையையும் மீறி சீனா தனது கட்டமைப்புகளை எல்லையில் நிறுத்தியிருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்தன. இதனால் இந்தியா சீனா எல்லையில் பதற்றம் நீடித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சீன ராணுவத்தின் அச்சுறுத்தல் அதிகமாகி வருவதால், உலக அளவில் படைகளை நிறுத்த அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். சீன ராணுவத்திற்குப் பதிலடி கொடுக்கும் அளவிற்கு தங்களிடம் போதிய படை இருப்பதாகக் கூறிய மைக் பாம்பியோ, சீனாவின் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் இடங்களில் தங்களின் படைகளைக் களமிறக்குவோம் எனச் சூளுரைத்தார்.



இதனால்தான் ஐரோப்பாவிலிருந்து நோட்டோ படைகளைத் திரும்பப் பெற்றதாகவும், ஆபத்து இருக்கும் இடங்களில் இனி அமெரிக்கப் படைகள் இருக்கும் என்றும் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.