உலகம்

புகைப்பழக்கத்தை ஒழிக்க ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்! கனடா அரசு முடிவு!

புகைப்பழக்கத்தை ஒழிக்க ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாசகம்! கனடா அரசு முடிவு!

ச. முத்துகிருஷ்ணன்

உலகிலேயே முதல்முறையாக ஒவ்வொரு சிகரெட் மீதும் எச்சரிக்கை வாசகம் அச்சடிக்கும் முறையை கொண்டுவர கனடா அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது சிகரெட் பெட்டிகளின் மீது புற்றுநோய் ஆபத்து குறித்த எச்சரிக்கை வாசகங்களை அச்சடிக்கும் வழக்கம் இந்தியா உள்பட பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

கனடாவில் சிகரெட் பெட்டிகளின் மீது புகையிலையின் தீமைகளை விளக்கும் படங்கள் அச்சடிக்கும் நடைமுறை 2001-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. தற்போது ஒவ்வொரு சிகரெட் மீதும் எச்சரிக்கை வாசகங்களை அச்சடிப்பதை கட்டாயமாக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மக்களிடம் கருத்து கேட்கப்பட்ட பின், உரிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் கனடா அரசு தெரிவித்துள்ளது.