அமெரிக்காவின் விர்ஜினியா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந் தனர்.
அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில் உள்ளது விர்ஜினியா பீச் நகரம். கொஞ்சம் பெரிய நகரமான இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் அதிமாக இருக்கும். அங்குள்ள நகராட்சிக் கட்டிட வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த வர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். அந்தப் பகுதி முழுவதும் ஒரே அலறலும் அழுகையுமாக எதிரொலித்தது.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும், அங்கு வந்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்தியவர் என சந்தேகிக்கப்படுபவர், நகராட்சியின் மூத்த ஊழியர் என்றும் பொதுமக்கள் பயன்பாட்டுத்துறையில் பணியாற்றி வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
’’விர்ஜினியாவில் நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் இது என்பதில் சந்தேகம் இல்லை. படுகாயமடைந்தவர்கள் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது’’ என்று விர்ஜினியா பீச் துணை மேயர் ஜேம்ஸ் வுட் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.