உலகம்

ஸ்விட்சர்லாந்தில் விமானம் விழுந்து விபத்து - 20 பேர் உயிரிழப்பு?

ஸ்விட்சர்லாந்தில் விமானம் விழுந்து விபத்து - 20 பேர் உயிரிழப்பு?

webteam

இரண்டாவது உலக போரில் பயன்படுத்தப்பட்ட பழங்கால விமானம் ஒன்று ஸ்விட்சர்லாந்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

ஜெர்மனியில் கடந்த 1939ம் ஆணடு தயாரிக்கப்பட்ட ஜங்கெர் ஜேயு52 ஹெச்பி- ஹாட் விமானம், பிஸ் செக்னாஸ் மலைப்பகுதியில் சுமார் 2500 மீட்டர் உயரத்தில் விபத்துக்குள்ளானது. 17 பயணிகளையும், 3 சிப்பந்திகளையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்த விமானத்தில் மொத்தம் 20 பேர் இருந்ததாக தெரிகிறது. ஸ்விட்ஸர்லாந்த்தின் டிஸினோ நகரிலிருந்து புறப்பட்ட விமானம் ஜூரிச் அருகே டியுபெண்டார்ஃப் ராணுவ விமானதளத்திற்கு சென்றுகொண்டிருந்தது. 

வானில் பறந்துகொண்டிருந்த விமானம் நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாக கீழே விழுந்ததாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். விமனாத்திலிருந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தின் பகுதிகள் ஒரு குறுகிய பரப்பளவிலேயே விழுந்திருப்பதால் வெடி விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த விமானத்தை ஜு ஏர் என்கிற நிறுவனம் இயக்கி வருகிறது. 1939ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நான்கு விமானங்களை இயக்கிவருவதாக் அந்த நிறுவனம் கூறியுள்ளது.