உலகம்

ஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கு எதிராக 128 நாடுகள் வாக்களிப்பு

ஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கு எதிராக 128 நாடுகள் வாக்களிப்பு

webteam

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்துள்ள அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக ஐநா பொதுக்குழுவில் பெருவாரியான நாடுகள் வாக்களித்துள்ளன. 

ஜெருசலேம் நகரை இஸ்ரேலும், பாலஸ்தீனமும் சொந்தம் கொண்டாடி வந்த நிலையில் அந்நகரை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வேண்டும் என்று ஐ.நா.வும் கேட்டுக்கொண்டது. ஆனால் அமெரிக்கா மறுத்துவிட்டது.

இந்நிலையில் ஜெருசலேம் அறிவிப்பை அமெரிக்கா திரும்ப பெற வலியுறுத்தி ஐ.நா.பொதுக்குழுவில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளுக்கு நிதியுதவி நிறுத்தப்படும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் அமெரிக்க முடிவுக்கு எதிராக இந்தியா உள்பட 128 நாடுகள் வாக்களித்தன. ஆதரவாக 9 நாடுகள் வாக்கு செலுத்தின. 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்துள்ள அமெரிக்காவின் முடிவு கேள்விக்குறியாகும் எனத் தெரிகிறது.