பிரிட்டனில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னதாக, அங்குள்ளவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
பிரிட்டன் நாட்டின் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக்குழு இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. குளிர்காலம் தொடங்க உள்ளதால், வழக்கமாக காய்ச்சல் பாதிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். இதனால் சாதாரண காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும், மூன்றாவது டோஸ் தடுப்பூசியை போட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, முன்களப் பணியாளர்கள், 16வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் 70வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு வருகிற செப்டம்பர் மாதம் முதல், பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மற்ற பிரிவினர் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.