உலகம்

முன்களப் பணியாளர் குழந்தைகள்... அரபு அமீரகத்தில் உயர்நிலைப்பள்ளி வரை இலவசக் கல்வி

முன்களப் பணியாளர் குழந்தைகள்... அரபு அமீரகத்தில் உயர்நிலைப்பள்ளி வரை இலவசக் கல்வி

webteam

கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுகாதார முன்களப் பணியாளர்களின் 1,850 குழந்தைகளுக்கு உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என அரபு அமீரக அரசு அறிவித்துள்ளது. இந்த சிறப்புத் திட்டத்தில் சேர்வதற்கு செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு அமீரகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி பெறும் குழந்தைகளுக்கு இலவச லேப்டாப் மற்றும் போக்குவரத்துச் செலவும் ஏற்றுக்கொள்ளப்படும். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை முன்களப் பணியாளர்களின் குழந்தைகள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.

அபுதாபியின் இளவரசர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நயான் உத்தரவின் பேரில் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைப்பதுடன், சுகாதார முன்களப் பணியாளர்களின் பொருளாதார அழுத்தங்களும் குறையும் எனவும் கூறப்படுகிறது.