ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கடந்த ஆண்டு வலியுறுத்தியது. ஆனால் இறக்குமதியை நிறுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் அவகாசம் கேட்டதால் தடைக்கான கெடுவை மே 2ம் தேதி வரை அமெரிக்கா நீட்டித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடு நெருங்கி வருவதால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மே 2 ம் தேதிக்கு பிறகும் கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடரும் நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது குறித்த விரிவான அறிவிப்பை அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.