உலகம்

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் ஈரான்: அமெரிக்கா குற்றச்சாட்டு

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் ஈரான்: அமெரிக்கா குற்றச்சாட்டு

webteam

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்கா பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளது.

சவுதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணை, ஈரானில் தயாரிக்கப்பட்டது என்றும் அதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியா மீது அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணையை, சவுதி ராணுவம் கடைசி நேரத்தில் இடைமறித்து அழித்தது.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இதுகுறித்து கூறும்போது, சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வீசிய நவீன ஏவுகணை ஈரானில் தான் தயாரிக்கப்பட்டது என்பதற்கு வலுவான ஆதாரம் உள்ளது. அந்த ஏவுகணையை நீங்கள் உற்றுப் பார்த்தீர்கள் என்றால், அது பயங்கரமானதாக இருக்கிறது என்று கூறினார். இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.