அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் பக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சிரியாவின் பரிஷா பகுதியில் தங்கியிருந்த பக்தாதி மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்க ராணுவம் நெருங்குவதை அறிந்த பக்தாதி உடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தார். அவரது உடல் கடலில் வீசப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.
இந்நிலையில் வடக்கு சிரியாவிலுள்ள அலெப்போ மாகாணத்தில் வசித்துவந்த பக்தாதியின் மூத்த சகோதரி ராஸ்மியா அவாட், அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்களை துருக்கி அதிகாரிகள் கைது செய்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் ராஸ்மியாவிற்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.