உலகம்

விக்கிபீடியாவுக்கு திடீர் தடை!

விக்கிபீடியாவுக்கு திடீர் தடை!

webteam

தகவல் களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியா தளத்தை பயன்படுத்த துருக்கி தடை விதித்துள்ளது.

இளைஞர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தகவல் மற்றும் கட்டுரை தொகுப்புகளை அள்ளித்தரும் தளமாக விக்கிபீடியா செயல்படுகிறது. படிக்காதவர்கள் கூட மிக எளிமையாக இந்த தளத்தில் தகவல்களை அறிந்து கொள்ளும் படி, பல மொழிகளில் தகவல்களை வழங்குகிறது. விக்கிபீடியா தளத்தில் தகவல்களை பெறுவது மட்டுமின்றி, பிரபலங்கள் அவர்களது அப்டேட்களை எடிட் செய்யும் வசதியும் தரப்பட்டுள்ளது. இத்தகைய விக்கிப்பீடியா துருக்கி நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

’விக்கிபீடியா இணையதளம், சர்வதேச அரங்கில் துருக்கிக்கு எதிரான தகவல்களை வெளியிட்டு வருகிறது. மேலும் விக்கிபீடியா இணையதளத்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களும் பதிவிடப்பட்டு வருகிறது. இது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது, எனவே தடை செய்யப்பட்டுள்ளது’ என அந்நாட்டுஅரசு கூறியுள்ளது.

விக்கிப்பீடியா துருக்கியில் தடை செய்யப்பட்டதை அடுத்து விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ், ‘தகவல் பெறுவது மனிதனின் அடிப்படை உரிமை. இந்த உரிமையை நிலைநாட்ட துருக்கி மக்களுடன் எப்போது துணை நிற்பேன்’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.