துருக்கி ராணுவமும், அதன் ஆதரவு படையும் சிரியாவின் முக்கிய நகரான அப்ரினை கைப்பற்றியது.
அப்ரின் நகரில் துருக்கி ராணுவமும் சிரிய விடுதலைப் படையும் குர்திஷ் போராளிக் குழுவுடன் கடும் சண்டையிட்டு வந்தன. போர் தீவிரமடைந்ததால் ஆப்ரின் நகரப் பகுதியில் இருந்து 50 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறினர். இதனையடுத்து, அப்ரின் நகரை தங்களது ராணுவம் கைப்பற்றிவிட்டதாக துருக்கி அதிபர் எர்டோகான் அறிவித்துள்ளார். சிரியாவின் அப்ரின் நகரைக் கைப்பற்றிய துருக்கி ராணுவம், குர்திஷ் இனத்தவரின் பாரம்பரிய சிலையை அகற்றியது.
இந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. குர்திஷ் இன மக்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நபரான காவா என்பரின் சிலையை அகற்றியதன் மூலம் துருக்கி ராணுவம் மிகப்பெரிய வரலாற்றுத் தவறைச் செய்துவிட்டதாக குர்திஷ் போராளிகள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.