உலகம்

நடுவானில் தடுமாறிய கனடா விமானம்: 37 பேர் காயம்!

நடுவானில் தடுமாறிய கனடா விமானம்: 37 பேர் காயம்!

webteam

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம், மோசமான வானிலை காரணமாக தடுமாறியதில் 37 பயணிகள் காயமடைந்தனர்.

கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு ஏர் கனடா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 269 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்தனர்.

இரண்டு மணி நேரம் கழித்து ஹவாய் தீவுக்கு மேலே, 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென்று குலுங்கியது. பயங்கரமாக குலுங்கி, ஆட்டம் கண்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் முன் இருக்கைகள் மீதும், மேல் கூரையிலும் மோதியதில் பலத்த காயம் அடைந்தனர். 

இதையடுத்து விமானி, ஹவாயின் ஹோனாலுலு சர்வதேச விமானத்துக்கு தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். பின்னர் அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. 

இந்த சம்பவத்தில் 37 பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்களில் 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.