உலகம்

வடகிழக்கு ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

வடகிழக்கு ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

Sinekadhara

வடகிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து கடலோர பிராந்திய பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நேரப்படி மாலை 6:09 மணியளவில் மியாகி பகுதியில் பசிபக் கடலில் 60 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1 மீட்டர் சுற்றளவிற்கு சுனாமி அலைகள் ஏற்பட்டதாக ஜே.எம்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8ஆக பதிவானது.