உலகம்

நீதிமன்ற தடையால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ட்ரம்ப்

நீதிமன்ற தடையால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ட்ரம்ப்

webteam

7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கான பயணத் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்ததால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வரும் வாரத்தில் வெளியாக இருக்கும் புதி‌ய உத்தரவு, நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளுக்கு விடை அளிக்கும் வகையில் அமையும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், நாட்டின் சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு புதிய ‌ஆணை தயாரிக்கப்பட்டு வருவதாக கூறினார். தனது உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது தவறானது என்றும் இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் ட்ரம்ப் கூறினார்.

முன்னதாக கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு செய்த மேல்முறையீட்டு வழக்கு திரும்ப பெறப்பட்டது.

ஈரான், ஈராக் உள்ளிட்ட 7 இஸ்லாமி‌ய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணிக்க தற்காலிக தடை விதித்து ஜனவரி 27 ஆம் தேதி ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார். ஆனால் நீதிமன்றம் அந்த உத்தரவுக்கு தடை விதித்தது.