ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை கொல்ல உதவிய ராணுவ நாயை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரில் பார்த்தார்.
ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி, கடந்த மாதம் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். தேடுதல் வேட்டையின்போது அல்பாக்தாதி சுரங்கப்பாதையில் மறைந்திருப்பதை ராணுவ நாயான கோனன், கண்டறிந்தது. இந்த சம்பவத்தின்போது கோனன் லேசாக காயமடைந்தது. பின்னர் சிகிச்சை பெற்று திரும்பி வந்துள்ள கோனன், வெள்ளை மாளிகைக்கு அழைத்து வரப்பட்டது.
கதாநாயகன் போல் கெளரவிக்கப்படும் அந்த நாயை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் துணை அதிபர் பென்ஸ் ஆகியோர் வரவேற்றனர்.