உலகம்

இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தா போதும்.. இங்கெல்லாம் ஓட்டலாம்..!

இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தா போதும்.. இங்கெல்லாம் ஓட்டலாம்..!

webteam

வெளிநாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டும் என பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் சிலர்தான் அதனை நிறைவேற்றுவார்கள். அப்படிப்பட்டவர்கள் ,வருடத்தில் 10 மாதங்கள் பணத்தை சம்பாதித்துவிட்டு கடைசியாக இரண்டு மாதத்தில் உலகத்தை சுற்றிபார்த்து வந்துவிடுவார்கள். அப்படி நாடு நாடாக சுற்ற விரும்புவர்கள் அந்த நாட்டின் இயற்கை எழிலை, கடற்கரையை கண்டுகளிக்கவும் ஆசைப்படுவார்கள். அதற்காக தங்களது காரை தாங்களே ஓட்டிச் செல்ல ஆசைப்படுவார்கள்.

இதுமட்டுமில்லாமல் இந்தியர்களில் பலர் வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளில் தங்கியுள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கும் தங்களது கார்களை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதற்காக அந்த நாட்டின் லைசென்ஸ் பெற வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாடுகளில் இந்திய லைசென்ஸை வைத்தே அந்தந்த நாடுகளில் நாம் வாகனங்களை இயக்கலாம். அது எந்தெந்த நாடுகள் என தெரிந்து கொள்வோமா..

இந்தியர்கள் தங்களது இந்திய லைசென்ஸை வைத்து அமெரிக்காவின் பல மாநிலங்களில் தங்களது கார்களை இயக்கலாம். ஆனால் ஒருவருடம் வரை மட்டுமே இயக்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த லைசென்ஸ் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். அதேசமயம் ஓட்டநர் உரிமம் காலாவதியாகி இருக்கக் கூடாது. அதேபோல பிரான்சிலும் இந்திய நாட்டின் ஓட்டுநர் உரிமம் அனுமதிக்கப்படுகிறது. இங்கேயும் ஒருவருட காலம்தான் அனுமதி உண்டு. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய ஓட்டுநர் உரிமத்தை ஒருவருட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதேசமயம் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். நார்வே நாட்டில் இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி 3 மாதங்கள் வாகனங்களை இயக்க முடியும்.

இதேபோல சுவிட்சர்லாந்து நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய ஓட்டுநர் உரிமமத்தை ஒரு வருட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஓட்டுநர் குறைந்தது குறைந்தபட்சம் 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஜெர்மன், சவுத் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்கிக் கொள்ளலாம்.

Courtesy: TimesofIndia