மூன்று நாகப்பாம்புகள் தாக்கலாமா? வேணாமா? என்ற வகையில் படமெடுத்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகின் மிகவும் ஆபத்தானவை இந்த கோப்ரா வகை பாம்புகள். அதன் மெதுவாக ஊர்ந்து செல்லும்போதிலும், அதன் கொடிய இயல்பின் காரணமாக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஏறக்குறைய உலகம் முழுவதும் 3,000 வகையான பாம்பினங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் 20 சதவீத பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை உடையவை.இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் கோப்ரா, ரசல்ஸ் வைப்பர், சா-ஸ்கேல்ட் வைப்பர் மற்றும் காமன் க்ரைட் ஆகிய நான்கு வகை பாம்புகளும் ஆபத்தானவை.
அந்த வகையில் மூன்று கோப்ரா வகை பாம்புகள் தங்களுக்குள் உச்சக்கட்ட கோபத்தில், சண்டையிட தயாராக இருக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலைளங்களில் வைரலாகி வருகிறது. மூன்று நாக பாம்புகளும் தாக்கலாமா? வேண்டாமா? என யோசிப்பதைப்போல படமெடுத்து நின்றுகொண்டிருக்கும் வகையில் உள்ளது அந்த வீடியோ. இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை 8,500 க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.