மரணத்தை யாராலும் வெல்ல முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அத்தகைய மரணத்தையே வெல்லும் ஆயுதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், கோமாவுடன் போராடும் நோயாளி ஒருவர் எழுந்து நடக்க முடியுமா? என கேட்கலாம். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மருந்தின் மூலம் மரணத்துக்கு தள்ளப்படும் நோயாளிகளை பிழைக்க வைத்து, அவர்களை சுற்றியுள்ளவர்களிடம் 4 மணி நேரம் பேச வைக்க முடியும்.
மரணத்தை வெல்லும் மருந்து கண்டுபிடிக்கப்படாதா என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் நம்மில் பலருக்கு வருவதுண்டு. இது தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிகளும் பல காலமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் மரணத்தை தள்ளிப்போடும் மருந்தை அமெரிக்காவின் மெச்சிகன் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சோல்பிடிம் என பெயரிடப்பட்ட இந்த மருந்து கோமா, பார்கின்சன் நோய், பக்கவாதம் உட்பட 20 நரம்பியல் பிரச்னை உள்ளவர்களிடம் எப்படி வேலை செய்கிறது என ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில், மரணத்தின் விளிம்பில் உள்ளவரை சுமார் 1 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் வரை உயிர் பிழைக்க வைத்து சுற்றி உள்ளவர்களுடன் பேச வைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நரம்பியல் நிபுணர் மார்க் பீட்டர்சன் கூறுகையில், இந்த சோல்பிடிம் மருந்துகளின் விளைவுகள் பக்கவாதம் அல்லது நரம்பியல் நிலைமைகள் உடைய நோயாளிகளுக்கு எதிர் விளைவை ஏற்படுத்துகிறது. மருந்துகள் பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் உள்ளனவா என்பதை ஒரு தீவிர மருத்துவ பரிசோதனையின் மூலம் அறிந்து கொண்டு அதன்பின் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.