உலகம்

கம்போடியாவில் திருவள்ளுவர் சிலை! பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்!

கம்போடியாவில் திருவள்ளுவர் சிலை! பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்!

webteam

கம்போடியா நாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு இருக்கும் கம்போடியா அரசின் கலை பண்பாட்டு துறை உதவியுடன் இன்று திறக்கப்பட்டது.

கம்போடியா நாட்டில் சியாம் ரீப் நகரில் இன்று முதல் அக்டோபர் 3 வரை உலக திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது. இன்று தொடங்கிய முதல் நாள் நிகழ்வில் கம்போடிய நாட்டின் சியாம் ரீப் நகரில் இருக்கும் தலைமை செயலகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.

அங்கோர் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் வி.ஜி.பி உலக தமிழ் சங்கம் தலைவர் வி.ஜி. சந்தோசம் சிலையை வழங்கினார். இந்த நிகழ்வில் கம்போடிய அரசின் பாரம்பரிய மரியாதை, கலை நிகழ்ச்சிகள் உடன் சிலை திறக்கப்பட்டது. கம்போடிய அரசின் கலை, பண்பாட்டு துறை இயக்குநர் சுபிப், ஒய்வு பெற்ற நீதியரசர் வள்ளிநாயகம், புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா, அங்கோர் தமிழ் சங்கம் தலைவர் சீனிவாச ராவ், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

3 ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட இந்த நிகழ்வு கொரோனா பாதிப்பால் காலதாமதம் ஆனாலும் இன்று சிறப்பாக நடத்தினர். மேலும் கம்போடிய அரசின் பாரம்பரி கலை மற்றும் சிறப்பு வழிபாடுகள் மூலமாக திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் தமிழ் ஆர்வலர்கள், பேராசியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருக்கின்றனர். பல்வேறு தரப்பில் ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்க இருக்கின்றனர். அதேபோல் திருக்குறளை கம்போடிய அரசின் கெமர் மொழியில் வெளியிடப்படுகிறது. இதற்கான முன் வரைவு இந்த மாநாட்டில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

செய்தியாளர் - ராஜ்குமார், கம்போடியா