Planet  PT DESK
உலகம்

சனி கிரகத்தில் இத்தனை நிலவுகளா? ஆராய்ச்சியாளர்களின் வியக்கத்தக்க கண்டுப்பிடிப்பு

சனி சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள கோள். சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும். சனி இப்போது நமது சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளுக்கான சாதனையைப் பெற்றுள்ளது.

PT WEB

சனி கிரகத்தின் மேலும் 62 புதிய நிலவுகளை பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் சூரிய குடும்பத்தின் அதிக நிலவுகளை கொண்ட கிரகமான வியாழனை சனி கிரகம் முந்தியுள்ளது. தற்போதைய ஆய்வின் படி சனி கிரகத்தின் 145 நிலவுகள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சனி சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள கோள். சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும். சனி இப்போது நமது சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளுக்கான சாதனையைப் பெற்றுள்ளது. 95 சந்திரன்களுடன் வியாழன் அதிக துணை கோள்களை கொண்ட கோளாக சூரிய கிரகத்தில் இருந்த நிலையில் தற்போது சனி கிரகத்தின் நிலவுகளின் மொத்த எண்ணிக்கையை 145 ஆக அதிகரித்துள்ளது.

PLANET

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் டாக்டர். ஆஷ்டனின் குழுவினர் மங்கலான சனி நிலவுகளைக் கண்டறிய 'ஷிப்ட் அண்ட் ஸ்டேக்' எனப்படும் நுட்பத்தைப் பயன்படுத்தியது. சந்திரன் வானத்தில் நகரும் விகிதத்தில் தொடர்ச்சியான படங்களின் தொகுப்பை மாற்றி எல்லா தரவையும் இணைக்கும் போது சந்திரனின் சமிக்ஞையை மேம்படுத்துகிறது, தனிப் படங்களில் காண முடியாதை மங்கலான சந்திரன்கள் அடுக்கப்பட்ட படத்தில்பார்க்க முடியும்.

2019 மற்றும் 2021 க்கு இடையில் ஹவாயின் பிரான்ஸ்-ஹவாய் தொலைநோக்கியை (CFHT) பயன்படுத்தி எடுக்கப்பட்ட தரவுகளை தொடர்ச்சியாக மாற்றி அடுக்கி, சனியை சுற்றி வரும் நிலவுகளை ஆய்வாளர்களால் கண்டறிய முடிந்தது. சுமார் 2.5 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டர் விட்டம் கொண்ட நிலவை கண்டறிய முடித்ததாக தெரிவிக்கபடுகிறது, மேலும் பனிக்கட்டி, பாறை,உலோகங்களால் ஆன சந்திரன்கள் சந்திரனை சுற்றி கண்டறியப்பட்டுள்ளது.

PLANET

பெரிய நிலவுகள் மற்றும் ஆரம்பகால சூரிய மண்டலத்தில் உள்ள பிற பொருட்களுக்கு இடையிலான மோதல்கள் விளைவாக இவ்வளவு சந்திரன்கள் சனி கிரகத்தை சுற்றி தோன்றியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நிலவுகளைப் பற்றிய ஆய்வு, நமது சூரிய குடும்பத்தின் வரலாறு மற்றும் அதை வடிவமைத்த சக்திகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்க முடியும்.

சனி கிரகத்தைச் சுற்றி 62 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டது வானியல் துறையில் மீண்டும் ஒரு உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.