உலகம்

வடகொரிய அதிபரின் உடல்நிலை: ஒவ்வொரு நகர்வுகளையும் அமெரிக்கா கவனிப்பதாக தகவல்!

வடகொரிய அதிபரின் உடல்நிலை: ஒவ்வொரு நகர்வுகளையும் அமெரிக்கா கவனிப்பதாக தகவல்!

webteam

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை தொடர்பான நகர்வுகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன

புகைப்பிடித்தல், உடல் பருமன், அதிக வேலைப்பளு காரணமாக இதய நோயால் கிம் ஜாங் உன் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைப்பிறகு அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சிஎன்என் செய்தி வெளியிட்டது.

வட கொரிய விவகாரங்களை கவனிக்கும் அதிகாரிகளின் தகவலை குறிப்பிட்டு சிஎன்என் இந்த செய்தியை வெளியிடுவதாக குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலை தென்கொரியா மறுத்துள்ளது. இதற்கிடையே அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை தொடர்பான நகர்வுகளை அமெரிக்க உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அணு ஆயுத சோதனை போன்ற பல விவகாரங்கள் மூலம் அமெரிக்காவை, வட கொரியா எதிர்த்து வந்த நிலையில் அந்நாட்டு அதிபரின் உடல்நிலை குறித்த தகவலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.