ஆப்கானிஸ்தானில் விமான நிலையங்களை இயக்குவது குறித்து தலிபான்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதன் மூலம், அனைத்து வெளிநாட்டு விமான நிறுவனங்களும் ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் பறக்கத் தொடங்கும் என தலிபான்கள் தெரிவித்துள்ளன. கடுமையான நெருக்கடியில் இருந்த போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தங்களுக்கு தொழிநுட்ப உதவிகளை செய்ததாக, விமானப் போக்குவரத்து அமைச்சர் குலாம் ஜெய்லானி வஃபா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பல்க், ஹெராத், காந்தஹார் மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் உள்ள விமான நிலையங்கள் செயல்படாமல் உள்ளன.
இதையும் படிக்கலாம்: செனகல்: மருத்துவமனையில் தீ விபத்து - 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு