உலகம்

14 வருடங்களாக வீட்டிற்கே செல்லாமல் விமான நிலையத்திலேயே வசிக்கும் மனிதர்! என்ன காரணம்?

14 வருடங்களாக வீட்டிற்கே செல்லாமல் விமான நிலையத்திலேயே வசிக்கும் மனிதர்! என்ன காரணம்?

webteam

குடும்பத்தினர் தொந்தரவு இல்லாமல் புகைபிடித்து மது அருந்த வேண்டும் என்பதற்காக 14 வருடங்களாக வீட்டிற்கே செல்லாமல் விமான நிலையத்திலேயே வசித்து வருகிறார் சீனாவின் வீ ஜியாங்குவோ.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள கேபிடர் சர்வதேச விமான நிலையத்தில் டெர்மினர் 2இல் 14 வருடங்களாக வ்சித்து வருகிறார் வீ ஜியாங்குவோ. 2008 ஆம் ஆண்டு முதல் இந்த விமான நிலையத்தில் தான் தங்கி வருகிறார். எந்த சூழ்நிலையிலும், கொரோனா வந்த போதும் இங்குதான் வாழ்ந்து வருகிறார். 60 வயதை கடந்த அவர், வீட்டிற்குச் சென்றால் நிம்மதியாக புகைபிடிக்க முடியாது, மது அருந்தமுடியாது என்பதற்காக விமான நிலையத்திலேயே தங்கி வருகிறார். ஒரு நாளின் நேரம் என்னவென்று தனக்கு தெரியாது என்றும், எப்போதும் பயணிகளின் கடலைச் சுற்றி இருப்பதால் எப்போதும் கவலைப்பட்டதில்லை என்றும் ஜியாங்குவோ கூறியுள்ளார்.

வீ ஜியாங்குவோ, அருகில் உள்ள காலை சந்தைக்குச் சென்று 6 வேகவைத்த பன்றி இறைச்சி ரொட்டிகள் மற்றும் காலை உணவுக்கு கஞ்சி கிண்ணம், மதிய உணவிற்கு இன்னும் சில உணவுகள் மற்றும் ஒரு சீன மதுபானமான பைஜு பாட்டில் ஆகியவற்றை வாங்குவதாக கூறினார்.“வீட்டில் எனக்கு சுதந்திரம் இல்லாததால் என்னால் அங்கு செல்ல முடியாது. நான் தங்க விரும்பினால், நான் புகைபிடிப்பதையும் குடிப்பதையும் விட்டுவிட வேண்டும் என்று என் குடும்பத்தினர் என்னிடம் சொன்னார்கள். என்னால் அதைச் செய்ய முடியாவிட்டால், எனது மாதாந்திர அரசு உதவித்தொகையான 1,000 யுவான் ($150) அவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறுகிறார்கள். பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு மது, சிகரெட்டை நான் எப்படி வாங்குவேன்?” என்றார் வீ ஜியாங்குவோ.

2017 ஆம் ஆண்டில், கிறிஸ்துமஸுக்கு முன்பு, விமான நிலைய அதிகாரிகள் அவரை வெளியேறச் சொன்னார்கள். அவர் மறுக்கவே போலீசார் அவரை விமான நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், சில நாட்களில் அவர் மீண்டும் விமான நிலையத்திற்கு வந்துவிட்டார். “குறைந்தபட்சம் விமான நிலையத்தில்தான் எனக்கு சுதந்திரம் இருக்கிறது” என்று அவர் கூறியதால், அதன்பின் அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியேறச் சொல்லவில்லை.