உலகம்

உலகிலேயே முதன்முறையாக பிரிட்டனில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

உலகிலேயே முதன்முறையாக பிரிட்டனில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

webteam

உலகத்திலேயே முதல் முறையாக அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் ஜெர்மனியின் பயோடெக் நிறுவனனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை போடும் பணி பிரிட்டனில் தொடங்கியுள்ளது. உலக சுகாதார ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இதுவாகும்.

90 வயதான மார்கெரட் கெனன் என்ற மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் அங்கு பணியாற்றும் முன்களப்பணியாளர்களுக்கும் 80 வயதிற்கும் அதிகமானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இந்த தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் உறைநிலையில் வைத்து பாதுகாக்க வேண்டியுள்ளது.

இந்த மருந்தை அடுத்த சிலவாரங்களுக்குள் 40 லட்சம் மக்களுக்கு போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொருத்தவரை கோவாக்ஸின் என்ற தடுப்பூசி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.