உலகம்

நடுக்குவாத கொடுமையிலிருந்து விடுதலை : 7 வருடங்களுக்கு பின் தனது கையால் சாப்பிட்ட நபர்

நடுக்குவாத கொடுமையிலிருந்து விடுதலை : 7 வருடங்களுக்கு பின் தனது கையால் சாப்பிட்ட நபர்

webteam

நடுக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆழமான மூளை தூண்டுதல் சிகிச்சையின் மூலம் 7 வருடங்களுக்குப் பின்னர் தனது கையால் தானே சாப்பிட்டார்.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள நாக்வெல்லி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஃபீல்ட்ஸ் (35). நடுக்குவாதம் எனப்படும் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 7 வருடங்களாக கடும் சிரமங்களுக்கு ஆளாகினார். நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் எனப்படும் கொடிய நோய் மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கூடிய ஒன்றாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பான மனிதர்களைப் போன்று செயல்படவோ, பேசவோ, சாப்பிடவோ அல்லது எழுதவோ முடியாது. அவர்களுக்கு அதிகப்படியான உடல் நடுக்கம் இருக்கும். கையில் சாப்பாட்டை எடுத்து வாய்க்கு கொண்டு செல்வதற்குள் சாப்பாடு சிதறிப்போகும் அளவிற்கு அவர்களுக்கு நடுக்கம் ஏற்படும்.

இந்த நோய்க்கு தீர்வை கண்டுபிடிக்கும் முயற்சியில் நீண்ட காலமாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆழமான மூளை தூண்டுதல் எனும் சிகிச்சை முறை இந்நோய்க்கு நல்ல தீர்வளிப்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மூளையின் ஆழமான தூண்டுதல் மூலம், உடலில் செயலற்ற செல்களுக்குப் பதிலாக மூளையை செயல்பட வைக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது. அதன்படி, நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் இயல்பான மனிதர்களைப் போன்று நடுக்கமின்றி சாப்பிடவோ, எழுதவோ முடியும் என தெரியவந்துள்ளது.

இந்த சிகிச்சை முறை ஜஸ்டினுக்கு சோதிக்கப்பட்டது. ஒரு கிண்ணத்தில் இருக்கும் உணவை ஸ்பூன் மூலம் எடுத்து சாப்பிடும் ஜஸ்டின் நடுக்கங்களுடன் சாப்பிட சிரமப்படுகிறார். ஆழமான மூளை தூண்டுதலை மேற்கொண்ட பின்னர் சாப்பிடும் அவர் நடுக்கமின்றி இயல்பாக சாப்பிடுகிறார். 7 வருடங்களுக்கு பின்னர் அவருக்கு கிடைத்த இந்த சிகிச்சை தீர்வு, அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.