உலகம்

"இதுவே என் கட்டளை..... என் கட்டளையே சாசனம்"

"இதுவே என் கட்டளை..... என் கட்டளையே சாசனம்"

webteam

தாய்லாந்து நாட்டில் ராஜ குடும்பத்தினரின் சட்டங்களை பேஸ்புக்கில் விமர்சித்த நபருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்து மன்னரின் சட்டத்திட்டங்கள் குறித்து பேஸ்புக்கில் விமர்சித்த 35வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தாய்லாந்து நாட்டில் சட்டங்களை விமர்சிப்பது அதனை இயற்றிய ராஜ குடும்பத்தை விமர்சிப்பதற்கு சமமாக கருதப்படுவதால், அவர் ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபருக்கு அதிகபட்ச தண்டனையாக 70 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தனர். இதனையடுத்து தனது தவறை அந்த நபர் ஒப்புக்கொண்டதால், விதிக்கப்பட்ட தண்டனையை பாதியாக குறைத்து 35 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ராஜ குடும்பத்தினரின் சட்டங்கள் கடுமையாக உள்ள நாடுகளில் தாய்லாந்து நாடும் ஒன்று. இங்கு சமீபத்தில் மன்னராக பொறுப்பேற்றுக்கொண்ட மஹா வஞ்சரலோங்க்ரோன் தாய்லாந்து சட்டத்திட்டங்களை மேலும் இறுக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.