உலகம்

மோடிக்கு எதிரான காங். விமர்சனத்திற்கு தைவான் பெண் மறுப்பு

மோடிக்கு எதிரான காங். விமர்சனத்திற்கு தைவான் பெண் மறுப்பு

webteam

பிரதமர் மோடி தினமும் ரூ.4 லட்சம் மதிப்பிலான காளான்களை சாப்பிடுவதாக கூறிய காங்கிரஸ் வேட்பாளரின் குற்றச்சாட்டுக்கு தைவான் நாட்டு பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரை நிறைவடைந்து, நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கிடையே நேற்று அகமதாபாத்தில் பரப்புரை செய்த காங்கிரஸ் வேட்பாளர் அல்பேஷ் தாக்குர், மோடி சாப்பிடும் காளான் ஒன்றின் விலை 80 ஆயிரம் ரூபாய் என்றும், ஒவ்வொரு நாளும் 5 காளான்களை அவர் சாப்பிடுவதாகவும் கூறினார். தைவான் நாட்டிலிருந்து அந்த காளான் இறக்குமதி செய்யப்படுவதாக கூறிய அவர், குஜராத் முதலமைச்சராக இருந்த போதிருந்தே அந்த காளானை மோடி சாப்பிட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் 35 ஆண்டுகளுக்கு முன் இருந்த மோடியின் படத்தை பார்த்தால் தற்போது அவர் மிகவும் சிவப்பாக மாறியிருப்பது தெரியவரும் என்றும், காளான் சாப்பிட்டதுதான் அதற்கு காரணம் என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த விமர்சனத்திற்கு தைவான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மற்றுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “எனது பெயர் மெஸ்ஸி ஜோ. நான் தைவான் நாட்டை சேர்ந்த பெண். இந்தியாவிலிருந்து வந்த செய்தி ஒன்றை பார்த்தேன். அதில் ஒரு அரசியல் தலைவர் கூறும் போது தைவானில் 1,200 டாலர்கள் மத்திப்புள்ள காளான் ஒன்று இருப்பதாக கூறுகிறார். அத்துடன் அந்த காளானை சாப்பிட்டால் சருமம் மெருதுவாகவும், சிவப்பாகவும் ஆகும் என்கிறார். ஆனால் அதுபோன்ற காளானை நான் எனது நாட்டில் கேள்விப்பட்டதே இல்லை. அதுபோன்ற காளான் இருப்பதற்கும் வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.