உலகம்

போர் அடித்துவிட்டதா எங்கள் காயங்கள் ? : வைரலாகும் சிரியா சிறுவனின் செல்ஃபி வீடியோ

போர் அடித்துவிட்டதா எங்கள் காயங்கள் ? : வைரலாகும் சிரியா சிறுவனின் செல்ஃபி வீடியோ

rajakannan

சிரியா சிறுவன் தங்களது கஷ்டங்களை செல்ஃபி எடுத்து வெளியிட்டிள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பகுதிகளின் அதிபர் ஆசாத்தின் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிரியாவில் தாக்குதலுக்கு ஆளான குழந்தைகளின் ரத்தம் சொட்டும் புகைப்படங்கள் நாள்தோறும் வெளியாகி வருகிறது. இந்தப் புகைப்படங்கள் பார்ப்பவர் மனங்களை கண்கலங்க வைத்துவிடுகிறது. 

இந்நிலையில், முகமது நஜிம் என்ற 15 வயது சிறுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செல்ஃபி வீடியோக்கள் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கிழக்கு கவுத்தா பகுதியைச் சேர்ந்த அந்த சிறுவன் எப்படியெல்லாம் பாதிப்பு அடைந்துள்ளோம் என்பதை அந்த செல்பி வீடியோவில் கூறியுள்ளான். அவனது பதிவில் உள்ள புகைப்படங்களும் சிரியாவில் நடக்கும் கோர தாண்டவத்தை கண்முன்னே நிறுத்துகிறது. இடிபாடுகளுக்கு நடுவே சமையல் செய்யும் படத்தையும் அவன் பதிவிட்டுள்ளான்.

சிறுவன் முகமதுவின் செல்ஃபி வீடியோவில் பேசியவை பின்வருமாறு:-

வீடியோ:-1

வீடியோ:-2