உலகம்

‘நான் உயிருடன் இருக்கிறேன்’ கையை உயர்த்தும் சிரியா சிறுவர்கள்!

‘நான் உயிருடன் இருக்கிறேன்’ கையை உயர்த்தும் சிரியா சிறுவர்கள்!

webteam

சிரியாவில் நடத்தப்படும் தாக்குதலில் உயிர் பிழைத்த சிறுவர்கள் ‘நான் உயிருடன் இருக்கிறேன்’ என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

சிரியாவில் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. சிரியாவின் கிழக்கு கவுட்டா நகரில் அரசுப்படைகளின் தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான புகைப்படங்களில் குழந்தைகள் இறந்து கிடக்கும் காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கவுட்டாவில் ஆங்காங்கே சேகரித்து வைக்கப்பட்ட குழந்தைகளின் சடலங்கள் மனதை பதறச்செய்தன. ஆனால் இன்னும் அங்கு போர் தாக்குதல்கள் ஓய்ந்த வண்ணம் இல்லை.

இந்நிலையில் கிழக்கு கவுட்டாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர்பிழைத்த சிரியாவின் சிறுவர்கள், ‘நாங்கள் உயிருடன் இருக்கிறோம்’ (#IAmStillAlive) என்று தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இது உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக கையை உயர்த்தி நிற்கின்றனர்.