ஸ்பெயின் நாட்டில் இருந்து கேட்டலோனியா பிராந்தியம் தனியாகப் பிரிவதற்கு ஸ்காட்லாந்து, வேல்ஸ் தேசியவாதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் இருந்து கேட்டலோனியா பிராந்தியம் தனியாகப் பிரிவது குறித்த பொதுவாக்கெடுப்பு நாளை நடக்க உள்ளது. பிரிவினைக்கு ஆதரவான அமைப்புகளும், ஸ்பெயின் நாட்டு தேசியவாதிகளும் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். எனினும், இந்தப் பொதுவாக்கெடுப்பு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என ஸ்பெயின் நாட்டு நாடாளுமன்றம் அறிவித்திருக்கிறது.
கேட்டலோனியா பிராந்தியம் தனி நாடாகப் பிரிந்து செல்வதற்கு ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளைச் சேர்ந்த தேசியவாதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஸ்காட்லாந்து தேசியக் கட்சி, கேட்டலோனியாவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தியது. பிளைட் சைமுரு என்ற வேல்ஸ் நாட்டு தேசியக் கட்சியும் கேட்டலோனியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.