ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படைத் தாக்குதலில் 11 பேர் பலியாயினர். 31-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பாக்தாத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நரவான் சந்தையில் இன்று காலை ஐந்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளான இவர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவத்தினரை குறி வைத்து அங்கு வந்துள்ளனர். அவர்களைக் கண்டதும் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூன்று பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மற்ற 2 பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 11 அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். 31 பேர் காயமடைந்தனர். இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 பேரும் அடங்குவர். இந்த தாக்குதலையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.