உலகம்

அணு ஆயுத சோதனையின் வெற்றி: வடகொரியா கொண்டாட்டம்

அணு ஆயுத சோதனையின் வெற்றி: வடகொரியா கொண்டாட்டம்

webteam

வடகொரியாவின் 6-வது அணு ஆயுத சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதைத் கொண்டாடும் வகையில், விஞ்ஞானிகள் மற்றும் அறிவியலாளர்களுக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் விருந்தளித்தார்.

சமீபத்தில் வடகொரியாவின் சக்திவாய்ந்த 6-வது அணு ஆயுத சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அத்துடன் கடந்த 3 ஆம் தேதி ஏவுகணையில் பொருத்தக்கூடிய ஹைட்ரஜன் குண்டு சோதனையும் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த அணு ஆயுத சோதனைகளின் வெற்றியை கொண்டாடும் வகையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கு விருந்தளித்தார். அப்போது ஹைட்ரஜன், அணு ஆயுத சோதனையின் வெற்றிக்காக கடினமாக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் வடகொரிய அதிபருடன் அவரது மனைவியும் பங்கேற்றார்.

வடகொரியாவின் இத்தகைய செயல்கள் உலக நாடுகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த அமெரிக்கா, உலக நாடுகளின் மத்தியில் வடகொரியா ஒரு மோசமான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐநா சபை வடகொரியாவிற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்துகிறது. ஆனால் அமெரிக்காவின் கண்டங்களையும், ஐநா சபையின் விதிமுறைகளையும் மதிக்கமால், போர் செய்யும் நோக்கத்துடனே வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.