உலகம்

தேவாலயத்துக்குள் புகுந்த கொள்ளை கும்பல்: கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழப்பு

தேவாலயத்துக்குள் புகுந்த கொள்ளை கும்பல்: கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழப்பு

newspt

பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தபோது, திடீரென கூட்டத்தில் ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பலைப் பார்த்து, தப்பிப்பதற்காக மக்கள் ஓடியதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலியாகியுள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா தலைநகர் மன்ரோவியாவின் அருகில் உள்ளது நியூ கிரூ டவுன். இங்குள்ள தேவாலயத்தில் கடந்த புதன்கிழமை இரவு முழுவதும் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. இதில் ஏராளமான மக்கள் தங்கள் குடுபங்களுடன் கலந்து கொண்டனர். அப்போது ஆயுதங்களுடன் கொள்ளையடிப்பதற்காக தேவாலயத்துக்குள் கும்பல் ஒன்று புகுந்துள்ளது. இதைப்பார்த்ததும் தேவாலயத்தில் இருந்த மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிகொள்ள அங்கும், இங்கும் ஓடியுள்ளனர். இதனால் அங்கு கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

இதில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி மிதித்தபடி வெளியேறினர். இந்தக் கூட்டநெரிசலில் சிக்கி 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து வானொலியில் பேசிய அந்த நாட்டின் தகவல் தொழிநுட்ப துணை அமைச்சர், ‘இன்று நாட்டிற்கு மிகவும் சோகமான நாள்’ என்று அறிவித்துள்ளார்.