இலங்கையில் பூர்வீக குடிகளாக வாழும் தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழகத்தைப் போலவே இலங்கையிலும் ஆதிகாலத்தில் இருந்து தமிழர்கள் வசித்து வருகிறார்கள். சிங்களத்தை அடுத்து தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கைதான் இலங்கையில் அதிகம்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், திரிகோணமலை மற்றும் அம்பாரா ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் சிறுபான்மையினராக ஆகிவிட்டது புள்ளி விவரங்களில் தெரியவருகிறது.