தென்கொரியாவில் உறைந்துபோன ஏரியில் மீன் பிடிக்கும் பாரம்பரியத் திருவிழா தொடங்கியுள்ளது.
சான்சியோனியோ எனப்படும் பாரம்பரியத் மீன்பிடித் திருவிழா ஆண்டுதோறும் தென்கொரியாவின் ஹவான்சியோன் பகுதியில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தொடங்கிய திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து மீன் பிடித்தனர்.
அவ்வாறு தூண்டிலில் சிக்கிய மீன்களை அங்கேயே சமைத்து உண்டனர். இது தவிர ராட்சத தொட்டியில் விடப்பட்ட மீன்களை பிடிக்கும் போட்டியும் அங்கு நடத்தப்பட்டது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் பங்கேற்று, ஆர்வத்துடன் மீன்களை பிடித்தனர்.