கொரோனாவில் இருந்து கனடா நாட்டுப் பிரதமரின் மனைவி மீண்டு வந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கனடா நாட்டுப் பிரதமரின் மனைவி சோபி, அதிலிருந்து குணமடைந்துள்ளார். லண்டன் சென்று திரும்பிய நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோய்ர்க்கு கொரோனா தொற்று உள்ளதாகக் கடந்த 12 ஆம் தேதி பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இதனையடுத்து சோபி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தொற்று அறிகுறி இல்லாவிட்டாலும், பிரதமரும், அவரது குடும்பத்தினரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர். இந்நிலையில், தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக சோபி தெரிவித்துள்ளார். கனடாவில், கொரோனாவுக்கு 61 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்து 616 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 445 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.