உலகம்

குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கான மரண தண்டனை ரத்து : சவுதி அரசு

குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கான மரண தண்டனை ரத்து : சவுதி அரசு

webteam

சவுதி அரேபியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை ரத்து செய்து அந்நாட்டு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் மன்னர் சல்மான் மற்றும் இளவரசராக உள்ள முகமது பின் சல்மானும் பல்வேறு சீர்த்திருத்தங்களை தங்கள் நாட்டு சட்டத்தில் கொண்டு வந்துகொண்டிருக்கின்றனர். அதன்படி, பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் தகர்த்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் கடந்த வாரம் சவுதி சட்டத்தின்படி இருந்த கசையடி தண்டனை நீக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டம் தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் வரவேற்றுள்ளது. இந்த முடிவு சவுதியை மேலும் மேம்படுத்தும் எனவும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.