உலகம்

சவுதி அரேபியாவில் கைதான 11 இளவரசர்களில் ஒருவர் விடுவிப்பு

சவுதி அரேபியாவில் கைதான 11 இளவரசர்களில் ஒருவர் விடுவிப்பு

webteam

சவுதி அரேபியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட 11 இளவரசர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மன்னருக்கே அதிக அதிகாரம் உள்ளது. அரசின் முக்கிய பொறுப்புகளில் மன்னர் குடும்பத்தினரே இருந்து வருகின்றனர். மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஊழலுக்கு எதிராக அவரது தலைமையின் கீழ் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக இந்த கமிஷன் செயல்படும் என்று கூறப்பட்டது. 

இதனையடுத்து ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக சவுதி அரேபியாவில் 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அங்குள்ள ஆடம்பர விடுதியில் காவலில் வைக்கப்பட்டனர். இளவரசர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கைது நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், மூன்று வாரங்களுக்குப் பிறகு சவுதியின் முக்கிய இளவரசரான மிதெப் பின் அப்துல்லா விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு பெரும் தொகையை கொடுக்க அவர் ஒப்புக்கொண்டதால் விடுவிக்கப்பட்டுள்ளதாக சவுதியை சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர்