தென் கொரியாவின் சியோல் உயர் நீதிமன்றம் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணைத் தலைவர் ஜே ஒய் லீ-க்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
52 வயதான லீ, முன்னாள் ஜனாதிபதி பார்க் கியுன்-ஹேயின் கூட்டாளிக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டில் 2017-ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், தண்டனை குறைக்கப்பட்டு மேல்முறையீட்டில் அந்த தண்டனையும் இடைநீக்கம் செய்யப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சியோல் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற, தற்போது இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
என்ன வழக்கு?
சாம்சங் நிறுவனத்தின் இரு இணை நிறுவனங்களை ஒன்றிணைக்க தென் கொரிய அரசின் அதிகாரபூர்வ ஆதரவை பெறுவதற்காக அதிபர் பார்க் கியுன்-ஹேயின் தோழி நடத்தி வந்த தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு ஜே ஒய். லீ நன்கொடைகள் வழங்கினார். இந்த நன்கொடைகள் அதிபருக்கு வழங்கப்படும் லஞ்சமாக சந்தேகிக்கப்பட்டது. பின்னர், நடந்த நாடாளுமன்ற கூட்ட விசாரணையின்போது, ஜே ஒய். லீ இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தார். ஆனால், குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்கள் கையகப்படுத்தபடவே ஜே ஒய் லீ மீது லஞ்ச, ஊழல் மோசடி வழக்கு பதியப்பட்டது. சாம்சங் குழுமத் தலைவர் உள்ளிட்ட நான்கு முக்கிய தலைவர்கள் மீது மோசடி, திட்டமிட்ட ஊழல் வழக்குகள் பதியப்பட்டது.
குற்றச்சாட்டில் 2017-ல் சிறையில் அடைக்கப்பட்டார். சில மாத சிறைவாசத்துக்கு பின் தண்டனை குறைக்கப்பட்டு மேல்முறையீட்டில் அந்த தண்டனையும் இடைநீக்கம் செய்யப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சியோல் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றிய நிலையில், தற்போது இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜே ஒய் லீ சாம்சங் குழுமத்தின் 3-ம் தலைமுறை தலைவர். இவரது தந்தை லீ குன் ஹீ-க்கு வயதானதைத் தொடர்ந்து குழும நிறுவனங்களுக்கு இவர் தலைமை ஏற்றார். கொரியாவின் வசதி படைத்த குடும்பங்களில் லீ குடும்பமும் ஒன்று. 6.2 பில்லியன் டாலர்கள் சொத்து கொண்ட ஜே லீ சியோலில் உள்ள தனது 4 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மாளிகையில் வாழ்ந்து வருகிறார். தற்போது சாம்சங் நுகர்வோர் மின்னணு குழுவிற்குத் தலைமை தாங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.