அச்சுறுத்தும் வகையில் ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்று அமெரிக்க போர்க் கப்பலை நோக்கி வேகமாக வந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது
வடக்கு அரபிக்கடல் பகுதியில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஃபராகுட் என்ற போர்க் கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அதே பகுதியில் ரஷ்யாவுக்குச் சொந்தமான போர்க் கப்பல் ஒன்றும் வந்து கொண்டிருந்தது. தங்களை நோக்கி வருவதையறிந்த அமெரிக்கக் கப்பல், ரஷ்யக் கப்பலுக்கு எச்சரிக்கை மணியை ஒலித்தது.
ஆனால் அதனைப் பொருட்படுத்தாத ரஷ்யக் கப்பல் வேகமாக ஃபராகுட் கப்பலை நோக்கி சென்றது. 180 அடி தூரத்திற்கு வந்தவுடன் ரஷ்ய கப்பல் திடீரென வேறு பாதையில் திரும்பி சென்றது. இதேபோன்று கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக யு.எஸ்.எஸ் சான்சல்லர்வில்லி என்ற அமெரிக்கக் கப்பலை ரஷ்யக் கப்பல் ஒன்று அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.