உலகம்

அமெரிக்க உளவு விமானங்களை விரட்டிய ரஷ்யா

அமெரிக்க உளவு விமானங்களை விரட்டிய ரஷ்யா

jagadeesh

கருங்கடல் பகுதியில் நுழைந்த அமெரிக்க உளவு விமானங்களைப் போர் விமானம் மூலம் விரட்டி அடித்ததாக ரஷ்யா பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 26 ஆம் தேதி கருங்கடல் பகுதியில் தங்களின் எல்லைக்குள் அனுமதியின்றி 3 அமெரிக்க உளவு விமானங்கள் நுழைந்ததாகவும், ரேடாரில் இதனைக் கண்காணித்த தங்களின் பாதுகாப்புப் படையினர் உடனடியாக சுகோய் SU -30 போர்விமானத்தை அனுப்பி அமெரிக்க விமானங்களை விரட்டி அடித்ததாகவும் ரஷ்யா பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சர்வதேச விதிகளுக்கு உட்பட்டே ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சீன ராணுவத்தின் அச்சுறுத்தல் அதிகமாகி வருவதால், உலக அளவில் படைகளை நிறுத்த அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். சீன ராணுவத்திற்குப் பதிலடி கொடுக்கும் அளவிற்கு தங்களிடம் போதிய படை இருப்பதாகக் கூறிய மைக் பாம்பியோ, சீனாவின் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் இடங்களில் தங்களின் படைகளைக் களமிறக்குவோம் எனச் சூளுரைத்தார்.

இதனால்தான் ஐரோப்பாவிலிருந்து நோட்டோ படைகளைத் திரும்பப் பெற்றதாகவும், ஆபத்து இருக்கும் இடங்களில் இனி அமெரிக்கப் படைகள் இருக்கும் என்றும் மைக் பாம்பியோ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.