உலகம்

”ஒடேசா துறைமுக நகரம் மீது குண்டு வீச ரஷ்யா தயாராகிறது” - உக்ரைன் அதிபர் தகவல்

”ஒடேசா துறைமுக நகரம் மீது குண்டு வீச ரஷ்யா தயாராகிறது” - உக்ரைன் அதிபர் தகவல்

ஜா. ஜாக்சன் சிங்

ஓடேசா துறைமுக நகரம் மீது ரஷ்யா குண்டு வீசத் தயாராகிறது என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், ராணுவத்தினரும் உயிரிழந்துள்ளதாக ஐநா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய துறைமுக நகரமான கெர்சனை ரஷ்ய படைகள் கைப்பற்றி விட்டன.

இந்நிலையில், கருங்கடலில் அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரமான ஒடேசாவை கைப்பற்றும் நோக்கில் அங்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அங்கு ராக்கெட் வெடிகுண்டு தாக்குதலை ரஷ்யா நடத்தக் கூடும் என மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒடேசா நகரின் துறைமுகம் மீது குண்டுகளை வீச ரஷ்ய படைகள் தயாராகி வருகின்றன. அங்கு ராக்கெட் வெடிகுண்டுகளுடன் ரஷ்ய போர் விமானங்கள் சுற்றி வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.