உலகம்

ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் வெற்றி

ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் வெற்றி

webteam

ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஞாயிறன்று பதிவான வாக்குகளில் பெரும்பாலனவை எண்ணப்பட்ட நிலையில் புடினுக்கு 76 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. கம்யூனிஸ்ட் வேட்பளார் Pavel Grudinin 13% வாக்குகள் பெற்றுள்ளார். வெற்றி உறுதி செய்யப்பட்ட பின்னர் பேசிய விளாடிமிர் புடின், மக்கள் கடந்த கால தனது ஆட்சியின் சாதனைகளுக்காக வாக்களித்துள்ளதாகத் தெரிவித்தார். முக்கிய எதிராளி அலெக்ஸி நாவல்னி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது, வாக்குப்பதிவு முறைகேடுகள் போன்றவையே புடினின் வெற்றிக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் வெற்றி பெற்ற புடினுக்கு சீன அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார்