வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான ஹெச் 1பி விசா அனுமதியை, 15 நாட்களில் மீண்டும் தொடங்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஹெச் 1பி விசாவிற்கு கடந்த 5 மாதங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மக்களின் பணிவாய்ப்பு குறைவதாக் கூறி இந்த தடையை அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் குறிப்பிட்ட வரையறைகளுடன் மீண்டும் ஹெச் 1பி விசாவிற்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க குடியுரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹெச் 1பி விசாவின் அனுமதியை மீண்டும் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளை 15 நாட்களுக்குள் முடிக்கவுள்ளதாகவும், முன்னதாக விசாவிற்கு விண்ணப்பித்தவர்களிடம் பெறப்பட்ட விரைவுக் கட்டணங்கள் திரும்ப வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் விசாவிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இந்த கட்டணங்கள் திரும்ப வழங்கப்படாது என்றும் கூறியுள்ளது.