ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியின் மனைவியும் கைது செய்யப்பட்டிருப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
சிரியாவின் பரிஷா பகுதியில் பதுங்கியிருந்த பாக்தாதி மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அப்போது, தான் பிடிபடாமல் இருக்க, கடந்த மாதம் 26 ஆம் தேதி உடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டார் பாக்தாதி.
(ராஸ்மியா)
இதையடுத்து அவரது சகோரி ராஸ்மியா அவாத் (Rasmiya Awad) அவரது கணவர் மற்றும் உறவினர்கள் துருக்கி அதிகாரிகளால், வடக்கு சிரியாவின் அஸாஸ் நகரில் கைது செய்யப்பட்டனர். ராஸ்மியா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இயங்குவதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பாக்தாதியின் மனைவியும் கைது செய்யப்பட்டிருப்பதாக துருக்கி அதிபர் எர்டகன் தெரிவித்துள்ளார். அங்காரா நகரில் இதை அறிவித்த எர்டகன், கைது செய்யப்பட்டவரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை குறிப்பிடவில்லை.