உலகம்

கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி !

கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி !

Rasus

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்‌காக கிர்கிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை புறப்பட்டார். பிரதமரின் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்லாது என வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

‌கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உ‌ச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். முன்னதாக பாலகோட் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வான் வழியாக இந்திய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், அந்த வழியாக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பிரதமரின் விமானம் செல்ல அனுமதிக்குமாறு இந்தியா கேட்ட நிலையில் அதை பாகிஸ்தான் ஏற்றது.

இந்நிலையில், இந்தியா‌ திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. தூரமாக இருந்தாலும், பாகிஸ்தான் வான்வழியாக பறக்காமல், ஒமன், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக பிரதமரின் விமானம் கிர்கிஸ்தான் சென்றடையும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், இன்று காலை டெல்லியில் இருந்து கிரிகிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் நகருக்கு புறப்பட்டுச் சென்றார். மாநாட்டில் பங்கேற்க வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை மோடி சந்திக்க மாட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.